பத்மா:
அந்த பெண்கள் விடுதி அப்படி ஒன்றும் வசதி கிடையாது. ஆனால் நான் அங்கு மகிழ்சியாக இருந்ததற்கு காரணம் பத்மா. Padhu என்று அழைப்பேன்.
இருள் சூழ்ந்த படிக்கட்டு. அசுத்தமான சமயலறை. சாப்பிடுவதற்கென்று தனி இடம் கிடையாது. யாராவது சந்திக்க வந்தால் உட்கார வைக்க இடம் கிடையாது. மேற்கு மாம்பலம், ஐந்து விளக்கு பகுதியில், நடிகை ஷாலினியின் தந்தை வீட்டிற்கு எதிர்புறத்தில் அமைந்திருந்தது அந்த விடுதி. விடுதியின் பெயர் நினைவில் இல்லை.
அங்கே எங்களுக்கு மிகவும் பிடித்த விஷயம்…(தொடர்வேன்)